ஏர்போர்டிலேயே விரைவில் இந்திய சுற்றுலா விசா- அமைச்சர் தகவல்
துபாய்: விசா கொள்கையில் அதிரடி மாற்றமாக இந்திய விமான நிலையங்களிலேயே வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் காந்தி சிங் அறிவித்துள்ளார்.
துபாயில் ஏடிஎம் சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு அங்கேயே சுற்றுலா விசா வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த முறை அமல்படுத்தப்படும். இந்தியாவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகளைக் கவருவதற்காக இந்த ஏற்பாடு.
தற்போது இந்தியா வரவிரும்பும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகவே விசா பெற முடியும். ஐந்தாண்டுகளுக்குள் எத்தனை முறைவேண்டுமானாலும் இந்தியாவுக்கு வந்து செல்ல அனுமதிக்கும் விசா முறையை 18 நாடுகளுக்கு ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்படி, தொடர்ச்சியாக 90 நாட்கள்வரை இந்தியாவில் தங்கலாம். பின்னர் கிளம்பிச்சென்றுவிட்டு மீண்டும் இதேபோல வந்து தங்கலாம். ஐந்தாண்டுகளுக்கு இந்த வசதியை பயன்படுத்தலாம்.
இந்தியாவில் சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. டிரெக்கிங் போன்ற சாகஸ சுற்றுலா, மருத்துவச் ற்றுலா மற்றும் கிராமிய, ஷாப்பிங் சுற்றுலா என பலவகையான புதிய சுற்றுலாக்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய தலங்களில் சுற்றுலா போலீஸாரை நியமிக்கும்படி அனைத்து இந்திய மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications