ஊட்டி மலைரயில் பழுது: சரிபார்க்க சென்ற 2 ஊழியர்கள் பலி
குன்னூர்: இன்ஜின் கோளாறு காரணமாக நடுகாட்டில் நின்ற ஊட்டி மலை ரயிலை சரி செய்யச் சென்ற ஊழியர்கள் டிராலி கவிழ்ந்து 2 பேர் பலியாயினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
நடுக்காட்டில் பழுதாகி நின்ற ஊட்டி மலை ரயில் இன்ஜினை சரி செய்ய ஒரு டிராயிலியில் 9 ரயில்வே ஊழியர்கள் சென்றனர். நீலகிரி மலையில் சாந்திபுரம் என்ற பகுதியில் டிராலி வந்தபோது தீடீரென்று நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது உயிர்தப்புவதற்காக டிராலியில் இருந்து வெளியே தாவிய 2 ஊழியர்கள் அதலபாதாள பள்ளத்தில் போய் விழுந்தனர். உடலில் பலத்த காயமடைந்த இருவரும் அதேஇடத்தில் பரிதாபமாக பலியாயினர்.
டிராலி கவிழ்ந்தபோது வெளியில் தூக்கியெறியப்பட்ட 6 ஊழியர்கள் படுகாயமடைந்த நிலையில் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ஊட்டி மலை ரயில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளைத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் 273 பயணிகள் இருந்தனர்.
குன்னூர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது ஆடர்லி ரயில் நிலையம் அருகே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அடர்ந்த காட்டுப் பகுதியில் ரயில் நின்றது. உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது.
இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் அங்கிருந்து கல்லார் பகுதிக்கு நடந்து அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மற்றொரு ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டது.
இன்ஜினி பழுதுபார்க்கச் சென்ற ஊழியர்களும் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications