கள்ளக்குறிச்சி ஆற்றில் மூழ்கி 3 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கொட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் செம்மலை. இவரது குழந்தைகள் தேன்மலர்(10), தமிழரசி(9), செந்தமிழ்செல்வன்(7) ஆகியோர் தங்கள் தாத்தாவுடன் சென்று கள்ளக்குறிச்சி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியாமல் 3 குழந்தைகளும் பரிதாபமாக மூழ்கி இறந்தன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளும் பலியான இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர.












Click it and Unblock the Notifications