வகுப்புகலவரம்: குண்டர் சட்ட மசோதா தாக்கல்

இந்த மசோதாவை சட்ட மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தெய்வீக சிலைகள் மற்றும் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, விகாரப்படுத்துவது இழிவு படுத்துவது போன்ற செயல்கள் மூலம் சிலர் ஊறு விளைவிக்கின்றனர் என்று அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பொது அமைதியை பெருமளவில் பாதிக்கும் வகையில் கலகம் செய்ய சிலர் தூண்டுகிறார்கள்.
மதம், இனம், ஜாதி அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே அடிக்கடி பகைமை உணர்ச்சியை வளர்த்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களால் பொது அமைதி பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்காக 1982ம் ஆண்டு கள்ள சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சார தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், குடிசை நில ஆக்ரமிப்பாளர்கள், வீடியோ திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் சட்டம் என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இந்த சட்டத்தில் உள்ள குண்டர்கள் என்ற வாசகத்தின் பொருள் வரையறைக்குள் மத,இன, ஜாதி பகைமையைத் தூண்டும் நபர்களை கொண்டு வந்து தடுப்பு காவலில் வைப்பதற்கு வகை செய்யப்படுகிறது என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications