கோடநாடு எஸ்டேட் வாயிலை திறக்க கோர்ட்டில் ஒப்புதல்
டெல்லி: கோடநாடு எஸ்டேட் நுழைவாயிலை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதாக எஸ்டேட் நிர்வாகத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ள சாலை வழியாக காமராஜர் நகர், அண்ணாநகர் குடியிருப்புகளுக்கு மக்கள் சென்று வந்தனர். அந்த சாலையை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிப்பதாகவும் சாலையை மூடி வைத்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் நுழைவாயிலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று குன்னூர் சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்டேட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சப்-கலெக்டர் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், முன்பு பின்பற்றப்பட்ட நிபந்தனைகளுடன் நுழைவாயிலை திறந்துவிட உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதவிர இப்பிரச்னை தொடர்பாக மேலும் பொதுநல 2 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த 3 வழக்குகளும் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு மற்றும் பொதுமக்கள் தரப்பில் வாதிட்ட வக்கீல்கள், இந்த பிரச்னையில் சப்-கலெக்டர் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சட்டவிரோதம். எனவே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் உயர்நீதிமன்ற அறிவுரைப்படி நுழைவாயிலை திறந்து விடுகிறோம் என்று உறுதியளித்தோம். எனவே இந்த வழக்கில் தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டனர்.
இதை ஏற்றுக் கொண்ட பெஞ்ச், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நுழைவாயிலை திறந்து விடுவதாக எஸ்டேட் நிர்வாகம் அளித்த உறுதியை இந்த கோர்ட் பதிவு செய்கிறது. வழக்கு விசாரணை வரும் ஜூலை மாதம் தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் மற்றும் ஜெயலலிதா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications