மனைவி சாவுக்கு தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
மதுரை: மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவருக்கும் சோழவந்தானைச் சேர்ந்த மாலதிக்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் மாலதி கர்ப்பமடைந்தார். அப்போது கர்ப்பத்தை கலைக்கும்படி வேலுசாமி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாலதி மறுத்ததால், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வேலுசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளும்படி மாலதி பலமுறை கூறியுள்ளார்.
ஆனால் வேலுசாமி அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த மாலதி கடந்த 26.11.98 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாலதியின் தந்தை திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக வேலுசாமி மீது வழக்கு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சித்தார்த்தன், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக வேலுசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications