கர்நாடகத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோலார்: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலியானார்கள்.
இன்று காலை இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட உதவி எஸ்.பி. எல்லப்பா கூறுகையில், நரசபுரா கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானார்கள். மாலூர் தாலுகாவில் உள்ள கே.ஜி. தியாகல் கிராமத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கள்ளச்சாராயத்திற்கு எட்டு பேர் பலியானதால் இரு கிராமங்களும் பதட்டத்தில் உள்ளன. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை விற்றவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications