ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியர் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் முகம்மது நயீம் விடுவிக்கப்பட்டார்.
ஆப்கானில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழிலாளர்கள், பொறியாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் செல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் முகம்மது நயீம் என்ற இந்தியத் தொழிலாளரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். ஹேராட் என்ற இடத்திலிருந்து இவர் கடத்தப்பட்டார்.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்காக இவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி டாக்சியில் போய்க் கொண்டிருந்தபோது நயீமை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவரை விடுவிப்பது தொடர்பாக இந்தியத் தூதரகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் நயீமை, தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர். இதை மத்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications