ஆசனவாயில் தங்க கட்டி கடத்திய இருவர் கைது
சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஆசன வாயில் வைத்துக் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 2 பேரை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் தொண்டியைச் சேர்ந்த இஸ்மாயில் ஆரி (30), திருவாடானையைச் சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பது தெரியவந்தது. இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்ததது.
இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இருவரும் ஆசனவாயில் தலா 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள 720 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications