ஜெ., லாலு, மாயாவதி பிரதமராவார்கள்: பத்திரிகையாளர் ஆருடம்

டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் குமார் ராஜேஷ், 'ஜனதா எனிமா 30 அவுட் ஆப் 60' என்ற நூலை எழுதி நேற்று வெளியிட்டார்.
அவரது பழுத்த அரசியல் அனுபவத்தை வைத்து எழுதியுள்ள இந்த நூலில், அடுத்த 20 ஆண்டுகால அரசியலில் நாட்டின் பிரதமர் பதவியைக் கைப்பற்றக்கூடிய அதிர்ஷ்டம் யாருக்கெல்லாம் வாய்க்கக்கூடும் என்பதை ஆதாரங்களுடன் அலசி பட்டியலிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய காங்கிரஸ் அல்லாத ஆளும்கட்சிக்கு நிச்சயம் ஒரு மாஜி காங்கிரஸ்காரர் தலைவராக இருக்க மாட்டார் என்றும் இந்த புத்தகம் ஆருடம் கூறுகிறது.
இது பற்றி நூலாசிரியர் குமார் ராஜேஷ் கூறுகையில், நமது நாட்டின் கடந்த 30 ஆண்டுகால கூட்டணி அரசியலை ஆராய்ந்து பார்த்தால், இதற்கு முந்தைய காலங்களைப் போல் அல்லாமல், எதிர்காலத்தில் மத்தியில் அமையக்கூடிய காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சியில் ஒரு மாஜி காங்கிரஸ்காரர் பிரதமராகும் வாய்ப்பு இல்லை என்று யாரும் சொல்ல முடியும்.
மத்தியில் இதுவரை ஆண்ட காங்கிரஸ் அல்லாத வேறு கட்சிகள் முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தியதாக சரித்திரம் இல்லை, வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசு தவிர. இதற்குக் காரணம் அவர் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேராதவர் என்பதுதான்.
அவருக்கு அடுத்தாற்போல அத்வானியைத் தவிர அடுத்த 20 ஆண்டுகளில் பிரதமராகும் வாய்ப்பு லாலு, மாயாவதி, ஜெயலலிதாவுக்குத் தான் அதிகமாக இருக்கிறது.
இந்த பட்டியல் முழுமையானது அல்ல. காங்கிரஸ் மற்றும் மாஜி காங்கிரஸ் காரர்கள் யாரையும் இதில் சேர்க்கவில்லை என்றார் குமார் ராஜேஷ்.
குமார் ராஜேஷின் பட்டியலில் ஜெயலலிதா, மாயாவதி, லாலு தவிர மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி, பிரகாஷ் காரத், முலாயம் சிங் யாதவ், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதீஷ்குமார், சீதாராம் யெச்சூரி, சுஷ்மா ஸ்வராஜ், ராம்விலாஸ் பஸ்வான், ஷரத் யாதவ் ஆகியோரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications