கோடைகால நீச்சல் பயிற்சிக்குச் சென்ற சிறுவன் பலி
சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கோடைகால நீச்சல் பயிற்சிக்குச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், இரு பயிற்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருடைய மகன் ரொனால்டோ. இவன், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள தி லீக் கிளப் என்கிற நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோடைகால நீச்சல் பயிற்சி முகாமில் சேர்ந்தான்.
நேற்று வழக்கம் போல நீச்சல் பயிற்சிக்குச் சென்ற சிறுவன் ரொனால்டோ எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தான்.
இதையடுத்து சிறுவனின் தந்தை ஜான்சன், சூளைமேடு காவல் நிலையத்தில் நீச்சல் பயிற்சியாளர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் இறந்ததாக புகார் கொடுத்தார். இதுகுறித்து ஜான்சன் கூறுகையில், அந்த நீச்சல் குளம் அருகே முதலுதவிக்கான எந்த வசதியும் இல்லை. ஆம்புலன்ஸைக் கூட அவர்கள் வரவழைக்கவில்லை.
எனது மகனின் மரணத்திற்கு, பயிற்சியாளர்களின் அலட்சியப் போக்குதான் முழுக் காரணம் என்றார்.
ஜான்சன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பயிற்சியாளர்கள் குகன் மற்றும் கல்பனா ஆகியோரைக் கைது செய்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications