Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக, கர்நாடக விஷச் சாராய சாவு 111 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்/ஓசூர்: தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் கள்ளச்சாராயத்திற்குப் பலியானோரின் எண்ணிக்ைக 111 ஆக உயர்ந்துள்ளது. சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கர்நாடகத்தில் மட்டும் 81 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகள் கடந்த 3 நாட்களாக சோக மயமாக காணப்படுகிறது. இப்போது இந்த சோக வட்டத்திற்குள் பெங்களூரும் இணைந்துள்ளது. எல்லாம் கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் வந்த வினை.

தமிழத்தில், ஓசூர் சுற்றுப் பகுதிகள், ஓசூர் அருகே உள்ள பின்னமங்கலம், தேவகானஹள்ளி ஆகிய கிராமங்கள், கர்நாடகத்தில் பெங்களூர் டேனரி சாலையையொட்டியுள்ள குடிசைப் பகுதிகள், ரோஷன் நகர், டி.ஜே.ஹள்ளி உள்ளிட்ட பகுதிகள், கோலார் மாவட்டம் நரசாபூர், அம்பேத்கர் காலனி, மாலூர் தாலுகா தியாகல் ஆகிய பகுதிகள்தான் கள்ளச்சாராயத்திற்கு பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.

கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 12 பெண்கள் உள்பட 81 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 5 பெண்கள் உள்பட 30 பேர் இறந்துள்ளனர். இதுதவிர 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு உயரும் என அஞ்சப்படுகிறது.

இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே மரண ஓலமாக இருக்கிறது. பிரேதப் பரிசோதனை முடிந்து கொடுக்கப்பட்ட உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்து வருகின்றனர். பெண்களும், ஆண்களும் கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.

நிவாரணம் அறிவி்பபு:

கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்த பலியானவர் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக தலா ரூ.50000 வழங்க அம்மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.10000 வழங்கப்படுகிறது.


11 போலீஸார் கூண்டோடு மாற்றம்:

கள்ளச்சாராய சாவுகளைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலையத்தில் உள்ள போலீஸார் 11 பேரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சப் இன்ஸ்பெக்டரும் அடக்கம்.

குழந்தைக்கும் கொடுத்த கொடூரம்:

இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே 3 வயதுக் குழந்தைக்கு அதன் தந்தையே விஷச் சாராயத்தைக் கொடுத்த கொடுமையும் நடந்துள்ளது.

பின்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அனுமந்தப்பா என்பவர், அனைவரும் விஷச் சாராயம் குடித்த தினத்தன்று தனது வீட்டுக்கு சாராயத்தை வாங்கி வந்துள்ளார்.

வீட்டில் வைத்து சாராயத்ைதக் குடித்த அவர் ஒரு டம்பளரில் ஊற்றி தனது 3 வயது மகள் அம்ருதாவுக்கும் கொடுத்துள்ளார். அந்த அப்பாவிக் குழந்தையும் அதைக் குடித்துள்ளது. பின்னர் வேலைக்குப் போய் விட்டு இரவில் வீடு திரும்பிய அனுமந்தப்பாவின் மனைவி அக்கையம்மாவும் மிச்சமிருந்த சாராயத்தைக் குடித்துள்ளார்.

விஷச் சாராயத்தைக் குடித்த அக்கையம்மாவுக்கும், அம்ருதாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அனுமந்தப்பா. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனுமந்தப்பா கொஞ்சம் சாராயம் குடித்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். ஆனால் அவரது மனைவியும், மகளும் சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கள்ளச்சாராயத்திற்கு இத்தனை பேர் சாகக் காரணம் என்ன என்பதை போலீஸார் விளக்கியுள்ளனர். கள்ளச்சாராயத்தில், வட மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வகை விஷப் பாக்கையும், கற்பூரத்தையும் போதைக்காக கலந்துள்ளனர். இதனால்தான் உயிரிழப்பு மிகப் பெரிதாகி விட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

மேலும் கர்நாடகத் தேர்தல் காரணமாக பல்வேறு கட்சியினரும் ஓட்டுக்காக கள்ளச்சாராயத்தை ஆறு போல கிராமங்களில் பாய விட்டுள்ளனர். இதனால்தான் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிதாகி விட்டதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+