பிஸ்வாஸ் கொடும்பாவி எரிக்க முயன்ற பா.பி. கட்சியினர் கைது
கோவில்பட்டி: பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் உருவபொம்மையை எரிக்க முயன்ற தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர் பொறுப்பிலிருந்து கார்த்திக்கை அகில இந்திய பொது செயலாளர் பிஸ்வாஸ் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு பார்வார்டு பிளாக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முருகேச பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது மாவட்ட பொருளாளர் முத்துபாண்டியன், நகர செயலாளர் மாயகண்ணன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ் உள்பட 8 பேர் பிஸ்வாஸ் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து கோவில்பட்டி போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
