உத்தபுரம் பாணியில் சேலம் அருகே தீண்டாமைச் சுவர் கட்ட முயற்சி
சேலம்: சேலம் மாவட்டம் ஆட்டையம்பட்டி அருகே தீண்டாமைச் சுவர் கட்ட ஒரு தரப்பினர் முயற்சிப்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் இந்தியாவையே அதிர வைத்தது. அந்த சுவரை இடிக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்க்கொடி உயர்த்தியதால் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஆட்டையம்பட்டி அருகே தீண்டாமைச் சுவர் கட்ட ஒரு தரப்பினர் முயற்சிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்டையம்பட்டி அருேக உள்ள கிராமம் சந்தியூர். இங்கு ஊருக்கு மத்தியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு ஒரு புறம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், மறுபுறம் பிற ஜாதியினரும் வசிக்கின்றனர்.
கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நுழைய அனுமதி கிடையாது. வெளியில் இருந்தபடிதான் சாமி கும்பிட வேண்டும், அவர்களின் கையைத் தொடாமல் கோவில் பூசாரி பிரசாதம் கொடுப்பார். அதைத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
காலம் காலமாக நடந்து வரும் இந்த தீண்டாமைச் செயலுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரை எதிர்ப்புக் குரல் எழுப்பியதில்லை. பொறுத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு அருகில் உள்ள காலி மைதானத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வராமல் தடுக்கும் வகையில், ஒரு சுவரை எழுப்ப ஒரு ஜாதியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சுவர் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து வருகின்றனர். இந்த நிைலயில் பொதுவாக உள்ள மைதானத்திற்குள்ளும் நுழைய முடியாமல் சுவர் எழுப்ப முயற்சிப்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அவர்கள் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தங்களது போராட்டம் குறித்து சந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த மேச்சேரி வாசன் என்பவர் கூறுகையில், கோவில் அவர்களுக்குச் சொந்தமானது. எனவே அவர்கள் வைத்ததுதான் அங்கு சட்டம். அதை நாங்களும் மீற விரும்பவில்லை. இப்போது உள்ள நிலையே தொடரட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் மைதானத்திற்குள்ளும் நாங்கள் வரக் கூடாது என்று கூறுவது நியாயமல்ல. ஏதாவது விசேஷம், கூட்டம் என்றால் அந்த மைதானம் மட்டுமே உள்ளது. அதையும் தடுக்க முயற்சித்தால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை மாவட்ட ஆட்சித் தலைவரும், அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
தீண்டாமைச் சுவர் கட்ட நடக்கும் முயற்சியால் சந்தியூர் கிராமம் பரபரப்பாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications