மலேசியா ஆளும் கட்சியில் இருந்து மகாதிர் விலகல்

82 வயதான மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது ஆளும் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய கழகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக அந்நாட்டு பிரதமராக மகாதிர் இருந்துள்ளார். இவர்தான், படாவியை, தனது அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்து அவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 8ம் தேதியன்று நடந்த பொதுத்தேர்தலில் அப்துல் படாவி தலைமையிலான ஆளும் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு முந்தைய பொதுத்தேர்தலைவிட மிகக் குறைந்த இடங்களைத்தான் அந்த கட்சி கைப்பற்ற முடிந்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அப்துல் படாவி பதவி விலகவேண்டும் என்று மகாதிர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனை ஏற்க படாவி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் படாவியின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் மகாதிர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மலாய் தேசியக் கழகத்தில் இருந்து இதர நிர்வாகிகளும் விலகவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், படாவியை எதிர்த்து வெளியேறுபவர்கள் எதிர்க்கட்சிக்கு சென்று விடவேண்டாம் என்றும், கட்சித் தலைமையில் மாற்றம் வரும்போது தன்னுடன் சேர்ந்து மீண்டும் கட்சியில் இணையலாம் என்றும் மகாதிர் முகமது கூறியுள்ளார்.
மகாதிரின் அதிரடி நடவடிக்கையால், படாவி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாதிரின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனால் கட்சியில் தனக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் படாவி கூறியுள்ளார். வரும் டிசம்பரில் நடக்கும் தேர்தலில் தனது பொறுப்பை நிலைநாட்டுவகையில் ஜெயித்துக் காட்டுவேன் என அவர் தெரிவித்தார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications