தமிழக, கர்நாடக விஷச் சாராய சாவு 171 ஆக உயர்வு
பெங்களூர்/ஓசூர்: தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் கள்ளச்சாராயத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது. சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கர்நாடகத்தில் மட்டும் 118 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தமிழத்தில், ஓசூர் சுற்றுப் பகுதிகள், ஓசூர் அருகே உள்ள பின்னமங்கலம், தேவகானஹள்ளி ஆகிய கிராமங்கள், கர்நாடகத்தில் பெங்களூர் டேனரி சாலையையொட்டியுள்ள குடிசைப் பகுதிகள், ரோஷன் நகர், டி.ஜே.ஹள்ளி உள்ளிட்ட பகுதிகள், கோலார் மாவட்டம் நரசாபூர், அம்பேத்கர் காலனி, மாலூர் தாலுகா தியாகல் ஆகிய பகுதிகள்தான் கள்ளச்சாராயத்திற்கு பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.
கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் சேர்த்து மொத்தம் 171 பேர் இறந்துள்ளனர். இதுதவிர 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு உயரும் என அஞ்சப்படுகிறது.
இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே மரண ஓலமாக இருக்கிறது. பிரேதப் பரிசோதனை முடிந்து கொடுக்கப்பட்ட உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்து வருகின்றனர். பெண்களும், ஆண்களும் கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.
சாராய ஊறல்கள் அழிப்பு:
கள்ளச்சாராயத்திற்கு நூற்றுக்கணக்கானர் உயிரிழந்த பின்னர் போலீஸார் சுதாரித்துக் கொண்டு ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் மலைகளில் குடங்கள், கேன்கள், பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்ற்றுக்கணக்கான கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஊர் மையத்தில் போட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
கோலார் பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டையில் பேரணி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், கள்ளச்சாராயத்திற்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கக் கோரி பேரணி நடத்தப்பட்டது. தளி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் இதற்குத் தலைமை தாங்கினார்.
ஓசூரில் இன்று காலை கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர்.
நிவாரணம் அறிவிப்பு:
கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்த பலியானவர் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக தலா ரூ.50000 வழங்க அம்மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.10000 வழங்கப்படுகிறது.
11 போலீஸார் கூண்டோடு மாற்றம்:
கள்ளச்சாராய சாவுகளைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலையத்தில் உள்ள போலீஸார் 11 பேரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சப் இன்ஸ்பெக்டரும் அடக்கம்.
குழந்தைக்கும் கொடுத்த கொடூரம்:
இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே 3 வயதுக் குழந்தைக்கு அதன் தந்தையே விஷச் சாராயத்தைக் கொடுத்த கொடுமையும் நடந்துள்ளது.
பின்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அனுமந்தப்பா என்பவர், அனைவரும் விஷச் சாராயம் குடித்த தினத்தன்று தனது வீட்டுக்கு சாராயத்தை வாங்கி வந்துள்ளார்.
வீட்டில் வைத்து சாராயத்ைதக் குடித்த அவர் ஒரு டம்பளரில் ஊற்றி தனது 3 வயது மகள் அம்ருதாவுக்கும் கொடுத்துள்ளார். அந்த அப்பாவிக் குழந்தையும் அதைக் குடித்துள்ளது. பின்னர் வேலைக்குப் போய் விட்டு இரவில் வீடு திரும்பிய அனுமந்தப்பாவின் மனைவி அக்கையம்மாவும் மிச்சமிருந்த சாராயத்தைக் குடித்துள்ளார்.
விஷச் சாராயத்தைக் குடித்த அக்கையம்மாவுக்கும், அம்ருதாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அனுமந்தப்பா. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனுமந்தப்பா கொஞ்சம் சாராயம் குடித்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். ஆனால் அவரது மனைவியும், மகளும் சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கள்ளச்சாராயத்திற்கு இத்தனை பேர் சாகக் காரணம் என்ன என்பதை போலீஸார் விளக்கியுள்ளனர். கள்ளச்சாராயத்தில், வட மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வகை விஷப் பாக்கையும், கற்பூரத்தையும் போதைக்காக கலந்துள்ளனர். இதனால்தான் உயிரிழப்பு மிகப் பெரிதாகி விட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.
மேலும் கர்நாடகத் தேர்தல் காரணமாக பல்வேறு கட்சியினரும் ஓட்டுக்காக கள்ளச்சாராயத்தை ஆறு போல கிராமங்களில் பாய விட்டுள்ளனர். இதனால்தான் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிதாகி விட்டதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகள் கடந்த 4 நாட்களாக சோக மயமாக காணப்படுகிறது. இப்போது இந்த சோக வட்டத்திற்குள் பெங்களூரும் இணைந்துள்ளது. எல்லாம் கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் வந்த வினை.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications