வன்னியர்-தலித் மோதலால் மூடப்பட்ட எறையூர் மாதா கோவில் திறப்பு
உளுந்தூர்ப்பேட்டை: தலித் மற்றும் வன்னிய கிறிஸ்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் எறையூர் மாதா கோவில் நேற்று திறக்கப்பட்டது. இன்று கொடியேற்றமும், நாளை தேர் பவனியும் நடைபெறவுள்ளது.
எறையூரில் உள்ள புனித ஜெபமாலை மாதா கோவில் யாருக்குச் சொந்தம் என்பதில் கடந்த மார்ச் மாதம் மோதல் ஏற்பட்டது. தலித் மக்களை இந்த சரச்சுக்குள் அனுமதிக்க மாட்டோம் என வன்னிய கிறிஸ்தவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் நாங்களும் இந்த சர்ச்சைத்தான் பயன்படுத்துவோம் என தலித் சமுதாயத்தினர் கூறினர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மார்ச் 9ம் தேதி சர்ச் மூடப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதுச்சேரி மறை மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல சுற்றுக்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இரவு சர்ச் திறக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இன்று கொடியேற்றமும், நாளை தேர்த் திருவிழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications