காவல் நிலையத்திற்கு பின்புறம் சாராய பாக்கெட்டுக்களின் குவியல்!
பெங்களூர்: கர்நாடகத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் மடிந்துள்ள நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குப் பின்புறம் நூற்றுக்கணக்கான சாராய பாக்கெட்டுக்களைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கர்நாடகத்திலும், தமிழகத்திலும், கள்ளச்சாராயத்தை அருந்திய ஆண்கள், பெண்கள் என 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் 127 பேர் மடிந்துள்ளனர்.
கோலார், பெங்களூர், பெங்களூர் புறநகர் மாவட்டங்களில் கள்ளச்சாராய பலி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கள்ளச்சாராய ஒழிப்பில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூர், பிரேசர் டவுன் காவல் நிலையத்திற்குப் பின்புறம் 400 சாராய பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குப் பின்புறமே சாராய பாக்கெட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் போலீஸாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூர் அர்பன் துணை ஆணையர் சாதிக் கூறுகையில், பிரேசர் டவுன் காவல் நிலையம் பின்புறம் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத கிணற்றில் 400 சாராய பாக்கெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கள்ளச்சாராய பாக்கெட்டுக்கள் ஆகும்.
இன்னொரு சம்பவத்தில், பாகலூர் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கள்ளச்சாராய பாக்கெட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பிரேசர் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கே.ஜி. ஹள்ளி பகுதியில்தான் கள்ளச்சாராயத்திற்கு 60 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications