கரூர் அருகே மின்னல் தாக்கி 12 ஆடுகள் பரிதாபமாக பலியானது.
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் பரிதாபமாக கருகி பலியாயின.
கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி பகுதியில் நேற்று திடீரென்று இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது.
அப்போது அரவாக்குறிச்சி அருகே கொளிஞ்சிவாடியை சேர்ந்த முத்துசாமி என்பவர் தனது வயல்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக இந்த மழை பெய்ததால் ஆடுகள் நனையாமல் இருப்பதற்காக அவற்றை ஓட்டிச்சென்று அருகில் இருந்த புதர் மறைவில் ஒதுக்கினார்.
அப்போது திடீரென்று அந்த புதர் பகுதியில் கடுமையான மின்னல் தாக்கியது. இதில் புதர் மறைவில் இருந்த ஆடுகள் மீதும் மின்னல் பாய்ந்து 12 ஆடுகள் அதேஇடத்தில் சுருண்டு விழுந்து பலியாயின. இந்த சம்பவத்தால் அரவாக்குறிச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications