வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரிக்க முயற்சி
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி ஆலயத்தின் நிலத்தை அபகரிக்க முயன்று வரும் கும்பல் அந்த பேராலயத்தின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நிலம் வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகில் உள்ளது.
அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் சிலர் பொக்லைன் எந்திரங்கள் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்த பேராலய நிர்வாகி சேவியர் அடிகளார், மற்றும் பாதிரியார்கள் அங்கு விரைந்து சென்று நில ஆக்கிரமிப்பு செய்த ரவி, தனபால், தங்கவேல், ஆசை பாண்டி ஆகியோரிடம் பேசினர்.
அப்போது அந்த கும்பல் பாதிரியார்களை தாக்க முயன்றது. மேலும் சேவியர் அடிகளார், மற்றும் பாதிரியார்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சேவியர் அடிகளார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நிலத்தை பாதுகாக்குமாறும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
பாதிரியர் மீது தாக்குதல்:
இதற்கிடையே கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் பாதிரியர் மீது மர்ம கும்பல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மற்றும் வெள்ளியங்காடு பகுதிகளில் வசித்து வரும் மலை வாழ் மக்களிடம் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிர மத பிரச்சாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இதனால் இந்து அமைப்புகளுக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந் நிலையில் காரமடை அருகே உள்ள மேல்பாவியூர் மலை கிராமத்தில் நீதிராஜ் என்ற கிறிஸ்துவ பாதிரியார் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அப் பகுதியில் உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று சர்ச்சில் இருந்த நீதிராஜ் மீது முன்று பேர் கொண்ட மர்ம கும்பல் உருட்டு கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
நீதிராஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாதிரியார் மீது தாக்குதல் நடத்தி வி்ட்டு தப்பியோடிய கும்பலை காரமடை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications