ரூ.3 கோடி ஹெராயின் கடத்தல்-பிலிப்பைன்ஸ் பெண் கைது
சென்னை: ரூ.3 கோடி ஹெராயினை மலேசியாவுக்கு கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவில் கோலாலம்பூர் செல்வதற்கு மலேசிய
ன் ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. இந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கி்டைத்த ரகசிய தகவலையடுத்து இந்த விமானத்தில் செல்ல இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் பெரில் ரெயானோ(28) என்ற பயணியை சோதனையிட்டனர்.
அவரது கையில் இருந்த உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டன. இதில் சந்தேகப்படும் பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏற்கெனவே விமானத்தில் ஏற்றப்பட்ட அவரது பெரிய சூட்கேஸை மீண்டும் இறக்கி சோதனையிட்டனர்.
இதில், 3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சூட்கேஸ் விளிம்பை சுற்றியுள்ள பீடிங்கில் இந்த பவுடர் சாமர்த்தியமாக அடைக்கப்பட்டிருந்தது.
பிலிப்பைன்ஸில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பைக்கு வந்த இந்த பெண், அங்கு கிடைத்த தொடர்பை வைத்து டெல்லிக்கு சென்று ஹெராயின் பவுடரை வாங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications