மத்திய அரசின் முடிவு ஆரம்பமாகி விட்டது- மோடி
அகமதாபாத்: கர்நாடகத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முடிவின் ஆரம்பமாகும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து நரேந்திர மோடி கருத்து ெதரிவிக்கையில், தென் மாநிலம் ஒன்றில் தனிப்பெரும் பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.
பாஜகவின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தென் மாநிலம் ஒன்றில் பாஜக, தனிப்பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்பு குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக வென்றது. இப்போது கர்நாடகத்தையும் கைப்பற்றியுள்ளோம்.
காங்கிரஸ் கட்சியின் நிலைமை மோசமானது என்ற நிலையிலிருந்து படு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறி விட்டது. இதனால்தான் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
துரோக அரசியலுக்கு கர்நாடக மக்கள் கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.
எதிர் வரும் லோக்சபா தேர்தலில் தனது கூட்டணியை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள காங்கிரஸ் கண்டிப்பாக சிரமப்படும்.
கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையை காங்கிரஸ் இழக்க ஆரம்பித்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் இனியும் காங்கிரஸுடன் இணைந்து இணக்கமாக செயல்படும் என எதிர்பார்க்க முடியாது. கூட்டணியின் சிதைவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் முடிவும் ஆரம்பமாகியுள்ளது என்றார் மோடி.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்காக தீவிரப் பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர்களில் மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications