மகள்-வேலைக்காரர் கொலை: கணவர் அப்பாவி என்கிறார் மனைவி
டெல்லி: எனது மகளையும், வேலைக்காரரையும் எனது கணவர் கொன்றிருக்க மாட்டார். அதேபோல டாக்டர் அனிதாவுடன் எனது கணவருக்கு எந்தத் தவறான உறவும் இலைல என்று அருஷியின் தாயார் நூபுர் கூறியுள்ளார்.
டெல்லி அருகே உள்ள நோய்டாவில், கடந்த 15ம் தேதியன்று அருஷி என்கிற 14 வயது சிறுமியும், அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக அருஷியின் தந்தையான டாக்டர் ராஜேஷ் தல்வார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவருக்கும், பெண் டாக்டர் அனிதா துரானி என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், இது அருஷிக்குத் தெரிய வந்ததால் அவர் ஆத்திரமடைந்ததாகவும், இதுதொடர்பாக கோபமடைந்த ராஜேஷ் தல்வார், தனது மகளையும், மகளிடம் அனிதா விவகாரம் குறித்துக் கூறிய ஹேம்ராஜையும் கொலை செய்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதேசமயம் இன்னொரு தகவலும் நேற்று வெளியானது. ஹேம்ராஜுக்கும் (வயது 45), அருஷிக்கும் இடையே தவறான உறவு இருந்ததால் அவர்கள் இருவரையும் தல்வார் தீர்த்துக் கட்டியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
இந்த நிலையில், தனக்கும் டாக்டர் தல்வாருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை அனிதா மறுத்துள்ளார். இவரும், டாக்டர் தல்வாரின் கிளினிக்கில்தான் பல் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து அனிதா துரானி கூறுகையில், நானும், எனது கணவரும், தல்வார் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இரு குடும்பத்தினரும் பல வருடங்களாக நல்ல முறையில் பழகி வருகிறோம். அருஷி எங்களுக்கு மகள் போன்றவர். எங்கள் மீது இப்படி அபாண்டம் கூறப்படுவது வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல அருஷியின் தாயாரும், தல்வார்- அனிதா கள்ளக் காதல் செய்தியை மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், அனிதா துரானியும், அவரது கணவர் பிரபுல் துரானியும் எங்களது குடும்பத்தில் ஒரு அங்கம். எனவே அனிதாவுடன் எனது கணவரை இணைத்துப் பேசுவதை நான் நம்ப மாட்டேன். ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்.
எனது கணவர் மிகவும் நல்லவர். அருஷி மீது அவர் அதிக பாசம் வைத்திதருந்தார். எனவே அவர் அருஷியைக் கொன்றிருக்க மாட்டார். அதேபோல ஹேம்ராஜும் மிகவும் நல்லவர். அருஷியை தனது பேத்தியைப் போல பார்த்துக் கொண்டார்.
இந்தக் கொலை வழக்கிலிருந்து நான் எனது கணவரை காப்பற்றப் போராடப் போகிறேன். எனது கணவர், அருஷியைக் கொன்றதை நான் அறிவேன் என்று கூறுவதில் சற்றும் உண்மை இல்லை.
அருஷியை எனது கணவர் கொன்றபோது நான் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறுவது கற்பனையாகும். ஒரு பெண் நாள் முழுவதுமா தூங்கிக் கொண்டிருப்பார்.
எனது கணவரைக் காப்பாற்ற நான் முயற்சிக்கவில்லை. அப்படிச் செய்தால் நான் பெண்ணே இல்லை. நான் மிருகமாகி விடுவேன். எனது கணவர் தவறு செய்யவில்லை. எனது மகளை அவர் கொல்லவில்லை. இதில் உண்மை வெளியே வர வேண்டும். அதற்காகப் போராடப் போகிறேன் என்று கூறியுள்ளார் நூபுர்.
இந்தக் கொலை தொடர்பாக தல்வாரைக் கைது செய்துள்ள போலீஸார், தல்வார் குற்றத்ைத ஒத்துக் கொண்டதாக வாக்குமூலம் எதுவும் கொடுத்தாரா என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications