குண்டாறு அணையில் மீண்டும் படகு சவாரி
தென்காசி: செங்கோட்டை குண்டாறு அணையில் மீண்டும் படகு சவாரி துவக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நீர் நிலைகளை நாடி செல்கின்றனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் போய்விட்டது.
இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பாபநாசம், மணிமுத்தாறு போன்ற இடங்களுக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மேலும் சிலர் செங்கோட்டை குண்டாறு அணைக்கு சென்று வருகின்றனர். குண்டாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
மேலும் குண்டாறு அணைக்கு மேலே சிறு சிறு அருவிகள் இயற்கை சூழலில் உள்ளதால் அங்கும் சென்று குளித்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக குண்டாறு அணையில் நேற்றுமுதல் படகு சவாரி துவக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய நபருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குண்டாறு அணையில் படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications