Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு மருத்துவமனை சாவுகள்- அவமானம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் மருந்து இல்லாத காரணத்தாலோ அல்லது டாக்டர்கள் இல்லாமல் சிகிச்சை கிடைக்காமலோ இறக்க நேரிட்டால் அது எனக்கு மிகப் பெரிய அவமானமாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி தினசரி ஒரு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். சுகாதாரத் துறை குறித்த ஆய்வுக் கூட்டத்தில்,

அரசு மருத்துவமனைகளில் 565 மருத்துவர் பணியிடங்களையும், 2000 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தொடர்ந்து முகாம்கள் நடத்தி ஏழை எளியோர் பயன்பெற நடவடிக்கை எடுக்கவும்,

ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ. 6,000 நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்மூலம் 8 லட்சத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 400 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டு தெரிவித்த கருணாநிதி, இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி குறைகளுக்கு இடமின்றிக் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனுக்குடன் உதவித் தொகைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கூறினார்.

கடந்த இரண்டாண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், 64 சிலைஸ் சி.டி.ஸ்கேன்கள், லித்தோடிரிப்ஸி, கலர் டாப்லர் எக்கோ கார்டியோகிராபி, செமி ஆட்டோ அனலைசர், அல்ட்ரா சோனோகிராம், கோபால்ட் சிகிச்சைக் கருவிகள் உட்பட பல முக்கிய மருத்துவ சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அவற்றின் பயன்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் மருத்துவமனைகளின் நடைமுறைகளை மேம்படுத்திட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போட்டவுடன் நான்கு குழந்தைகள் இறந்த நிகழ்வை மிகுந்த வருத்தத்துடன் நினைவு கூர்ந்த முதல்வர் கருணாநிதி, தற்போது அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்களிலும் மருத்துவர்கள் முன்னிலையில் தடுப்பூசிகள் போடப்படுவதைப் பொதுமக்கள் பெரிதும் வரவேற்பதால் தடுப்பூசிகள் போடும் திட்டத்தில் தொய்வு ஏதும் ஏற்படாதவாறு மருத்துவர்கள் முன்னிலையில் பாதுகாப்புடனும் விழிப்புடனும் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயர்த்தப்படும் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தவும்,

மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் ரூ. 120 கோடி செலவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

மருந்து இல்லாமலோ அல்லது மருத்துவர் இல்லாமலோ ஒரு குழந்தையோ அல்லது ஒரு மனித உயிரிழப்போ ஏற்படுமானால் அதனைப் பெரும் அவமானமாகக் கருதுவேன். இதனை உணர்ந்து மருத்துவத் துறையில் பணிபுரியும் அனைவரும் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+