கர்நாடக முதல்வராக 29ம் தேதி எதியூரப்பா பதவியேற்பு

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பலரின் எதிர்பார்ப்புகளையும் மீறி பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 224 இடங்களில் 110 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது. இது அறுதிப் பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு 80 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 28 தொகுதிகளும் கிடைத்துள்ளன. 6 சுயேச்சைகளும் தேர்தலில் வென்றுள்ளனர்.
பெரும்பான்மை பலத்திற்கு பாஜகவுக்கு இன்னும் 3 பேரே தேவை. இந்த ஆதரவை சுயேச்சைகளிடமிருந்து பாஜக பெற்றுவிட்டது.
இந் நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதியூரப்பா, சட்டசபை பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 29ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்க பாஜக தீர்மானித்துள்ளது. அன்றைய தினம் முதல்வராக எதியூரப்பா பதவியேற்கிறார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தென்னகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில், தென்னகத்தின் முதல் பாஜக முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எதியூரப்பா.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications