கரூர் அருகே 17,000 டெட்டனேட்டர்கள் கொள்ளை
கரூர்: கரூர் அருகே தனியார் கிட்டங்கியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 17 ஆயிரம் டெட்டனேட்டர்களை ஒரு கும்பல் திருடிச் சென்றது. இது நக்சலைட்டுகளின் கைவரிசையா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் புன்னம்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கல் குவாரிகளுக்குத் தேவைப்படும் வெடிபொருட்களை விற்று வருகிறார். இதற்காக அப்பகுதியில் ஒரு வெடிபொருள் கிட்டங்கியை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கிட்டங்கியை மூடி விட்டு வீட்டுக்குப் போனார். நேற்று காலை மீண்டும் பணிக்கு வந்தபோது கிட்டங்கியின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்து அதிர்ந்தார்.
உள்ளே போய் பார்த்தபோது, அங்கிருந்த டெட்டனேட்டர் பார்சல்களைக் காணாமல் திடுக்கிட்டார். உடனடியாக இதுகுறித்து போலீஸில் அவர் புகார் கொடுத்தார்.
போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருட்டுப் போன பார்சல்களில் மொத்தம் 17 ஆயிரம் டெட்டனேட்டர்கள் இருந்துள்ளன. எனவே இவற்றை நக்சலைட்டுகள் யாரேனும் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கிட்டங்கியின் உள்ளே மது பாட்டில்களும் கிடந்தன. எனவே கொள்ளையடிக்க வந்த கும்பல் இரவில் வந்து குடித்து விட்டு நிதானமாக கொள்ளையடித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பெருமளவிலான டெட்டனேட்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் அவற்றை மீட்க போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications