சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் பலி
சென்னை: சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.
இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.
ஈக்காட்டுதாங்கலில் பெண் பலி:
அதே போல ஈக்காட்டுத் தாங்கலில் பைக்கில் அமர்ந்து சென்ற பெண் பஸ் மோதி பலியானார்.
கணவருடன் பைக்கில் சென்ற காஞ்சனா (32) என்பவர் பின்னால் இருந்து வந்த பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலியானார்.












Click it and Unblock the Notifications