ஓகேனேக்கல: எதியூரப்பாவுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை
சென்னை: தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான ஓகேனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு புதிதாக கர்நாடகத்தில் பதவியேற்கவுள்ள பாஜக அரசு இடையூறாக இருந்து விடக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பேரியக்கம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 2004ம் ஆண்டை விட 15 இடங்கள் கூடுதலாகப் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆட்சிக்கு வரவிருக்கும் பாஜக, தமிழக மக்களின் ஜீவாதார உரிமைப் பிரச்சனைக்கு விரோதமாக இருந்து விடக் கூடாது. அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் கூட ஓகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற தேசியவாதியான எடியூரப்பா தடையாக இருக்க மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தை நான் வரவேற்கிறேன்.
எனவே கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு புதிய கர்நாடக அரசு இடைஞ்சலாக இல்லாமல் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அத்திட்டம் தமிழகத்துக்கு உரிமையானது என்ற கடந்த கால வரலாற்றை மறந்துவிடக் கூடாது. கர்நாடக மாநில அரசாலேயே ஏற்கப்பட்டது என்பதையும் புறக்கணித்துவிடக் கூடாது. அதன்மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மாநில உறவைப் பேணிக் காத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications