ரஷ்யா அனுப்பிய யுரேனியம் கூடங்குளம் வந்தது
Subscribe to Oneindia Tamil
மும்பை: ரஷ்யா அனுப்பிய யுரேனியம் எரிபொருள் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு மின் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.
இந்திய அணுசக்தி கழக செய்தித் தொடர்பாளர் சித்திக் மும்பையில் கூறுகையில்,
ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் யூனிட்-1 பிரிவுக்கான யுரேனியத்தை ரஷ்யா அனுப்பியது. அந்த யுரேனியம் நேற்று முன்தினம் (மே 25) கூடங்குளத்தை அடைந்தது.
இந்த அணு மின் நிலையத்தின் ஆயுட்காலம் முழுவதும் யுரேனியம் எரிபொருளை வழங்க ரஷ்யா உறுதியளித்துள்ளது. சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு அணுமின் நிலையம் செயல்படும் என்றார்.
ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இதுவரை 86 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications