ஜெ. வழக்கு: வருவான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1993-94 நிதியாண்டில் சொத்து வரி கணக்கு காட்டாததால் சொத்துவரி சட்டம் 35பி பிரிவின்கீழ் என்மீது சென்னை வருமானவரித்துறை உதவி ஆணையர் புகார் செய்தார்.
இந்த வழக்கு, பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 1997ல் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கும்படி கோரி விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் இந்த மனுவை கடந்த 2008 பிப்ரவரி 25ம் தேதியன்று நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆனால் சொத்துவரி சட்டம் பிரிவு 14 அல்லது 17 (1)ன் படி வேண்டுமென்றே சொத்துக் கணக்கை காட்டாமல் மறைப்பவர்கள் மீதுதான் பிரிவு 35 பி-யின்கீழ் தண்டனைக்குரியதாகும்.
எனவே இந்த வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமாகும். இதனால் அந்த உத்தரவை ரத்து செய்து என்னை விடுவிக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி வேணுகோபால் இது குறித்து 2 வாரங்களுக்குள் வருமானவரித்துறை பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு வரும் ஜூன் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications