சுற்றுலா சென்ற வாரியத் தலைவரிடம் கொள்ளை
கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்றுலா சென்ற தமிழ்நாடு மண் பாண்ட வாரிய தலைவரின் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் சூட்கேஸ் களவு போனது.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நல வாரிய தலைவராக இருப்பவர் சோம நாராயணன். சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
கோடை இன்பச்சுற்றுலாவாக சென்னையில் இருந்து தனது குடும்பத்தாருடன் நேறறு ஒரு வேனில் கொடைக்கானலுக்குக் கிளம்பிச் சென்றார்.
வேன் மேற்கூரையில் அவரது குடும்பத்தாரின் உடை, நகை மற்றும் ரொக்கம் அடங்கிய 6 சூட்கேஸ்கள், மற்றும் 12 பெரிய பைகள் வைத்து கட்டப்பட்டிருந்தன.
கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள உளுந்தூர்பேட்டை ரயில்வே லெவல்கிராசிங் கேட் மூடியிருந்ததால் வேன் சிறிது நேரம் நின்றது.
பின்பு வேன் புறப்பட்டு சமயபுரம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்ப நின்ற போது சோம நாராயணன் வேனில் இருந்து கீழே இறங்கினார். அப்போது யதேச்சையாக வேன் மேற்கூரையை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த சூட்கேஸ்கள், பைகள் காணமல் போனது தெரியவந்தது.
இது குறித்து திருச்சி எஸ்பி கலியமூர்த்தியிடம் சோம நாராயணன் புகார் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications