வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய பெண் மின்னல் தாக்கி பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய பெண் மின்னல் தாக்கி பலியானார்.
புதுக்கோட்டை அருகே உள்ள மங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சித்ரா (35). நேற்று இரவு தங்களது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சித்ரா சென்றுள்ளார்.
அப்போது பலத்த இடி மின்னலுடன் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சித்ரா மீது எதிர்பாராதவிதமாக பயங்கர மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications