சர்வதேச விண்வெளி மையத்தில் டாய்லெட் பிரச்னை!

Subscribe to Oneindia Tamil

Space Station
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தே ஒரே கழிப்பறையும் செயல்படாமல் இருப்பதால் விண்வெளி வீரர்கள் செய்வதறியாமல் திண்டாடி வருகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியால் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தற்போது சர்வதேச விண்வெளி வீரர்கள் 3 பேர் தங்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மையத்தில் உள்ள ஒரே ஒரு கழிப்பறையும் பழுதடைந்துவிட்டதால் அங்குள்ள வீரர்கள் பெரும் தர்மசங்கடத்துக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி உள்ளனர்.

இந்த கழிப்பறையை ரஷ்யா வடிவமைத்திருந்தது. கடந்த வாரம் இந்த கழிப்பறையை ஒரு வீரர் பயன்படுத்தியபோது அதிலிருந்த மோட்டார் திடீரென்று பழுதடைந்தது. இதனால் அந்த கழிப்பறையில் திரவக் கழிவுகளை சேகரிப்பதில் அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. எவ்வளவோ முயன்றும் இந்த கோளாறை சரிசெய்ய முடியவில்லை.

எப்போது செயல்படும் என்று தெரியாமல் 'ஒன்' போவதற்குள் வீரர்கள் திண்டாடி விடுகின்றனராம். அந்த வீரர்கள் செய்த அதிர்ஷ்டம்- நல்ல வேளையாக 'டூ டாய்லெட்' போக வழியிருக்கிறதாம்.

உடைந்த கழிப்பறையில் திடக் கழிவுகளை சேகரிக்கும் அமைப்பு நன்றாக செயல்படுவது ஆறுதல் தரும் விஷயம் என்கின்றனர் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்.

டாய்லெட் பிரச்னைன்னு வந்துட்டா வீடு என்ன? விண்வெளி என்ன? எல்லாம் ஒன்றுதான். பிரச்னை சரியாகும்வரை இருப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்கிறார் நாசா செய்தித் தொடர்பாளர் ஆலார்டு பியூட்டல். (ஈஸியா சொல்லிட்டாரு. இருந்து பார்த்தா தெரியும்)

இந்நிலையில் சர்வதேச மையத்தில் இணைந்துள்ள சோயுஸ் விண்கலத்தில் உள்ள சிறிய டாய்லெட்டை பயன்படுத்தினர். அதுவும் நிரம்பிவிட்டது.


வரும் 31ம் தேதியன்று சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் புறப்பட்டுச் செல்கிறது. 2ம் தேதியன்று சர்வதேச மையத்தை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் புதிய டாய்லெட்டுக்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆனால் ஏற்கெனவே விண்கலம் புறப்படுவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டநிலையில், தற்போது விண்கலத்தின் எடைக்கேற்ப செய்யப்பட்டுள்ள ஆயத்தங்களில் எந்தவிதமான மாற்றங்கள் செய்வது என்று விஞ்ஞானிகள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

அதுவரை விண்வெளி வீரர்கள் கைவசம் கிடைக்கும் டப்பாக்களை பொத்தலிட்டு 'மூச்சா' இருந்து சமாளிக்க வேண்டியதுதான் என நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பாராதவிதமாக இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டதால் நாசா விஞ்ஞானிகள் இதைத் தவிர வேறு வழி ஒன்றும் புரிபடாமல் கையைப் பிசைகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+