தமிழகத்தில் 45 நாள் மீன் பிடி தடை நீங்கியது
கன்னியாகுமரி: தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 45 நாட்களாக அமலில் இருந்து வந்த விசைப்படகு மீன் பிடித் தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. இதையடுத்து நாளை முதல் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனவிருந்தி காலம் என மீன்வள ஆராய்ச்சி துறையால் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மீன்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில் 45 நாட்களுக்கு விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 45 நாட்களில் மீனவர்கள் விசைபடகை சரி செய்தல், வலைகள் சரி செய்தல், புதிய வலைகள் வாங்குதல், படகு சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
இந்தத் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நாளை காலை முதல் மீனவர்கள் மீன் பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
45 நாட்களாக மீன் பிடி நடைபெறவில்ைல என்பதால் தற்போது கூடுதல் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர்.
அதேசமயம், கன்னியாகுமரி மீனவர்கள் ஜூன் 1 அல்லது 2ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் குளச்சல் முதல் கேரளா வரை ஜூன் 15 முதல் ஜூலை 30 வரை 45 நாட்கள் மீன் பிடிக்க தடை அமல்படுத்தப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications