'சைகோ' வதந்தி-அரசுக்கு விஜய்காந்த் கோரிக்கை
கடலூர்: கடலூர் மாவட்ட முந்திரிக் காடுகளில் அடையாளம் தெரியாத கொலை வெறிக் கும்பல் தங்கியிருப்பதாக பெரும் பீதி நிலவுகிறது. அந்த கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்வதோடு, இது குறித்த வதந்திகளையும் தடுக்க வேண்டும் என விஜய்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேமுதிக தலைவரான விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, கம்பாபுரம் பகுதிகளிலும் அந்தப் பகுதிகளிலுள்ள முந்திரிக் காடுகளிலும் அடையாளம் தெரியாத கொலை வெறிக் கும்பல் தங்கியிருப்பதாகவும்,
இரவு நேரங்களில் ஊர்களில் புகுந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும், இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்தும் மக்களிடையே கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தந்த ஊரிலுள்ள இளைஞர்கள் ஆயுதங்களுடன் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் இரவு நேரங்களில் ரோந்து வருகின்றனர். இளம் பெண்கள் வீட்டுக்குள் வைத்து பூட்டப்படுகின்றனர். வெளியில் தாய்மார்களும் ஆயுதங்களுடனும், தீப்பந்தங்களுடனும் இரவு முழுவதும் கண்விழித்து காவல் காக்கின்றனர். இந்த நிலை இன்னும் தொடர்ந்து நீடிக்கிறது.
சந்தேகத்திற்கு இடமானவர்களை பொது மக்களே பிடித்துக்கொண்டு போய் காவல்நிலையத்தில் ஒப்படைத்தால், அவர்களுக்கு மொழி தெரியவில்லை, பைத்தியம் என்று சொல்லி விட்டுவிடுகின்றனர் என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
ஆளைக் காட்டுகிறோம் வாருங்கள் என்று காவலர்களை மக்கள் அழைத்தால், போலீஸ் நிலையத்தில் போதுமான ஆட்கள் இல்லை என்று கூறி போலீசார் வர மறுக்கின்றனர் என்று தெரிவிக்கின்றார்கள்.
காவல்துறையை பொருத்தவரையில் வதந்தியை பரப்ப வேண்டாமென்றும், வழக்குகளை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியிருக்கிறோம் என்றும் அறிக்கை விடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையை பலப்படுத்தி அந்த கிராமங்களில் இரவு, பகலாக போலீசார் ரோந்து சென்றால் சந்தேகத்திற்குரியவர்களையும் கைது செய்யலாம், வதந்தியை தடுக்கலாம்.
விலைவாசி உயர்வால் வேதனை ஒரு புறம், இரவு நேரங்களில் மின்சாரத்திற்கு பஞ்சம். இதனால் கிரிமினல்களுக்கு நல்ல வேட்டை. இதை தடுத்து நிறுத்த இரவு முழுவதும் கண்விழிப்பதால், ஏழைகள் பகலில் கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை.
இந்த வேதனைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என்று கேட்டுள்ளார் விஜய்காந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications