சபரிமலை: மகர விளக்கு செயற்கையாக ஏற்றப்படுவதாக சர்ச்சை- விசாரிக்க அரசு முடிவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் தோன்றுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் சென்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளன்று பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு 3 முறை தோன்றி மறையும். மகர விளக்கு தோன்றும்போது ஐயப்பனே காட்சி தருவதாக ஐதீகம். இந்த மகர ஜோதியை ஐயப்ப சுவாமியாகவே கருதி பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
இந் நிலையில் ஐயப்பன் கோவில் தலைமை தந்திரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருவாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான ராமன் நாயர், மகர விளக்கு என்பது இயற்கையாக தோன்றுவதே அல்ல. கோவில் ஊழியர்களால் செயற்கையாக ஏற்றப்படுகிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் கேரள சுற்றுலா மேம்பாட்டுத் துறை தலைவர் செரியன் பிலிப்பும் மகர ஜோதி என்பது பக்தர்களை ஏமாற்றும் ஒரு மோசடி செயல் என்றார்.
இந்தக் கருத்துக்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி ஐயப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரருவி்ன் பேரனான ராகுல் ஈஸ்வர் தந்திரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
மகர விளக்கு வேறு. மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தை குறிக்கும்.
மகர விளக்கு என்பது, பழங்காலத்தில் ஐயப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும். மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால், இந்த வழக்கம் பல நூற்றாண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
மகர ஜோதியும், மகர விளக்கும் ஒன்று என்று நினைக்கும் ஒரு சிலரின் தவறான கருத்து காரணமாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தேவையில்லாதது. இந்த இரண்டு விஷயங்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கூறுகையில், மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பது அரசுக்குத் தெரியும். மகர விளக்கு ஏற்றப்படும் பகுதிக்கு செல்வதென்பது மிகவும் கடினம். இஸ்லாமிய மக்கள் சந்திரனின் பிறைவடிவை பார்த்து, விழாவை தீர்மானிப்பது போலான ஒரு நிகழ்வுதான் இது. நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையில் கைவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இதை சொல்வதால் எனது முற்போக்கு சிந்தனைக்கு எந்த குறையும் ஏற்படாது என்றார்.
விசாரணை நடத்தப்படும்- முதல்வர்
இந் நிலையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் நிருபர்களிடம் பேசுகையில்,
சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்று கண்டறிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையில் பக்தர்களின் நம்பிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அரசு நடந்து கொள்ளாது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications