பண வீக்கம் 8.1% ஆக உயர்வு-ப.சி. கவலை

பண வீக்க விகிதம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பண வீக்கமும் உயர்ந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில், மே 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்க விகிதம் 7.82 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இது மிக அதிகமாகும்.
பணவீக்கம் 8.1 சதவீதமாக உயர்ந்திருப்பது குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் சிதம்பரம் பேசுகையில், இது கவலை தரும் விஷயம். பணவீக்கத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு எளிமையான வழிகள் எதுவும் இல்லை. இருப்பினும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிகளை கண்டுபிடித்தாக வேண்டும் என்றார்.
இதற்கிடையே, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு குறித்து முடிவு செய்ய இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தில் விலை உயர்வு முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை 3 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. காஸ் சிலிண்டர்களின் விலையும் கூட்டப்படவுள்ளதாக தெரிகிறது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 20 வரை விலை உயர்வு இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications