பெங்களூரில் தமிழ் படக் குழு மீது கன்னட அமைப்பு தாக்குதல்
கர்நாடகத்தில் படப்பிடிப்புக்குச் செல்லும் தமிழ்ப் படக் குழுவினர் அவ்வப்போது தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. முன்பு சரத்குமாரின் சமுத்திரம் படக் குழுவினர் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகினர்.
இந் நிலையில் 'ஏன் இப்படி மயக்கினாய்' என்ற படத்தின் யூனிட்டார் மீது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. இவர்தான் தற்போது ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் நாயகனாக அஜீத்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட், நாயகியாக கீரத் பட்டல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங் பெங்களூர் பிரேசர் டவுன் பகுதியில் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக அங்கு வந்தனர். போலீஸ் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அவர்கள், படக்குழுவினர் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். இங்கு படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும் கோஷமிட்டனர்.
இந்த தாக்குதலில் இயக்குநர் கிருஷ்ணாவும், அவரது உதவியாளர்கள் இருவரும் காயமடைந்தனர். உடனடியாக ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் படக்குழுவினர் பெங்களூரை விட்டு கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர்.
ஓகேனக்கல் திட்டத்தை எதிர்ப்பதில் தீவிரமாக உள்ள பாஜக அரசு கர்நாடகத்தில் பதவியேற்றுள்ள நிலையில் கன்னட அமைப்பினர் தமிழ்ப் படக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது













Click it and Unblock the Notifications