நாளை முதல் ஹோட்டல்களில் இட்லி, வடை விலை குறைப்பு
சென்னை: தமிழகத்தில் ஹோட்டல்களில் நாளை முதல் உணவுப் பண்டங்களின் விலை குறைப்பு அமல்படுத்தப்படவுள்ளது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்களில் இட்லி, வடை, பொங்கல், பூரி, டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டீ, காபி போன்றவற்றின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிடவே பொதுமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோட்டல் அதிபர்கள் சங்க நிர்வாகிகளை இருமுறை அழைத்து அரசு பேச்சு நடத்தியது. இதில் 10 சதவீத அளவுக்கு விலைக் குறைப்பு செய்ய ஹோட்டல் அதிபர்கள் ஒத்துக் கொண்டனர். இருப்பினும் கூடுதலாக விலைக் குறைப்பு செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ரத்ததான முகாமில் கலந்து கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உணவுப் பண்டங்களின் விலைக்குறைப்பு குறித்துக் கூறுகையில், ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையை 10 சதவீத அளவுக்கு குறைப்பதாக ஹோட்டல் அதிபர்கள் கூறியுள்ளனர். ஆனால் குறைந்தது 20 சதவீதமாவது குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இன்று மாலை புதிய விலைப் பட்டியலுடன் வருவதாக ஹோட்டல் அதிபர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது. இந்த விலைக் குறைப்பு முதல்வரின் பிறந்த நாளான நாளை முதல் அமலுக்கு வரும் என்றார் அவர்.
இதன் மூலம் இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications