நளினி மனுவுக்கு எதிராக வழக்கு: சுவாமி

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுவாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில், சேதுசமுத்திர திட்ட பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று மாற்று பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.
மேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
சேதுசமுத்திர திட்ட பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முதலைக்கண்ணீர் வடித்து கவிதை எழுதுகிறார்.
இந்தப் பிரச்சனையில் அவர் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். சேது திட்ட பிரச்சனையில் உண்மையிலேயே கருணாநிதி வருத்தத்தில் இருந்தால் ஏன் பல கோடி ரூபாய் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, சோனியாவின் மகள் பிரியங்கா தன்னை சந்தித்த பின்னர் தம்மை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நளினி பெண் என்பதாலோ, ஒரு குழந்தைக்கு தாய் என்பதாலோ அவருக்கு கருணை காட்டக்கூடாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமாக ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுதலை கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு தரப்பில் நியாயமான முறையில் விவாதம் நடைபெறாது என்பதால் இதில் என்னையும் சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
பூங்கோதையை தொடர்ந்து கருணாநிதி உள்ளிட்ட 20 அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பான ஆதார சிடிக்கள் என்னிடம் உள்ளன. ஆனால் அவற்றை எனக்கு அளித்த அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.
இந்திய - சீன உறவு குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்ற வருமாறு சீன அரசு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக வரும் 11ம் தேதி சீனா செல்கிறேன்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் தின் தவறான கொள்கைகள் காரண மாகவே விலைவாசி உயர்ந்துள்ளன. விலைவாசி குறைய வேண்டும் என்றால் சிதம்பரம் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
பெட்ரோல் விலையை உயர்த்தாமல் அவற்றின் மீதான வரி மற்றும் சுங்கத் தீர்வையை அரசு குறைக்க வேண்டும். இதன் மூலம் பெட்ரோல் விலை பாதியாக குறைக்க இயலும் என்றார் சுவாமி.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications