என்எல்சி தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக்-பதற்றம்
நெய்வேலி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி, பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
இப்பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்ைத நடத்தப்படும் எனவும், அதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவை என்றும் சட்டசபையில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இருப்பினும் ஆற்காடு வீராசாமி கூறிய ஒரு மாத கால அவகாசம் முடிந்த பின்னரும் கூட மத்திய அரசுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதையடுத்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம்சார்பில் இன்று ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
ஆனால் இதுகுறித்து கவலைப்படாத என்.எல்.சி. நிர்வாகம், புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யப் போவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications