காங்கிரசில் ராஜசேகர்-ஜீவிதா!
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் தமிழில் நடிக்க ஆரம்பித்து இப்போது ஆந்திராவில் பிரபலமாக உள்ள அதிரடி நாயகன். இவரும், நடிகை ஜீவிதாவும் காதலித்து மணந்து கொண்டனர்.
சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ராஜசேகர் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த சிரஞ்சீவி ரசிகர்கள், ராஜசேகர், ஜீவிதா மற்றும் குழந்தைகள் வந்த காரை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். இதில் குழந்தைகளுக்கு தலையில், காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி, ராஜசேகரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வருத்தமும் தெரிவித்தார்.
தற்போது சிரஞ்சீவி தனது புதிய கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமாக உள்ளார். அதேசமயம், நடிகர் ராஜசேகர், மனைவி ஜீவிதாவுடன் காங்கிரஸில் இணையத் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ராஜசேகர ரெட்டியை ராஜசேகரும், ஜீவிதாவும் சந்தித்துப் பேசினர். அப்போது தெலுங்கானா பகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு இருவரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜசேகர் பேசுகையில், நான் மறைந்த என்.டி.ஆர். மீது மிகுந்த பாசம் கொண்டவன், மரியாதை கொண்டவன். இதன் காரணமாக தெலுங்கு தேசம் கட்சிக்காகப் பிரசாரம் செய்துள்ளேன்.
இருப்பினும் கட்சி என்ற முறையில், எனக்கு காங்கிரஸைப் பிடிக்கும். நான் விரைவில் காங்கிரஸில் சேரவுள்ளேன். அப்போது அது அனைவருக்கும் புரியும் என்றார்.
சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தால் பீதியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, ராஜசேகர் - ஜீவிதாவை வைத்து சமாளிக்க முயற்சிக்கும் என்று தெரிகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
"எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ் விளக்கம்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி













Click it and Unblock the Notifications