சென்னை மீனவர்களை கடத்திச் சென்ற ஆந்திர மீனவர்கள்
சென்னை: சென்னையைச் சேர்ந்த 100 மீனவர்களையும் அவர்கள் பயணித்த 16 பைபர் கிளாஸ் படகுகளையும் ஆந்திர மீனவர்கள் கடத்திச் சென்று விட்னர். இதனால் காசிமேட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தென் மாவட்ட மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எமன் என்றார், சென்னை, திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு ஆந்திர மீனவர்கள்தான் எதிரி.
அடிக்கடி சென்னை மீனவர்களை கடத்திச் சென்று, பணம் வாங்கிக் கொண்டு விடுவது அவர்களின் வழக்கமாகி விட்டது. இந்த அட்டகாசத்திற்கு இதுவரை முடிவே இல்லை.
இந்த நிலையில், காசிமேட்டைச் சேர்ந்த 100 மீனவர்கள் 16 பைபர் கிளாஸ் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். நெல்லூர் அருகே அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆந்திர மீனவர்கள் விரைந்து வந்து அனைவரையும் சுற்றி வளைத்தனர்.
பின்னர் தமிழக மீனவர்களை தங்களது பகுதிக்கு கடத்திச் சென்றனர். படகுகளையும் கடத்திச் சென்று விட்டனர். இதனால் காசி மேடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இந்தக் கடத்தல் குறித்து மாநில மீன்வளத்துறை அமைச்சர் சாமியிடம் மீனவர்கள் சங்கம் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சாமி கூறுகையில், மீனவர்களை பத்திரமாக மீட்டு சென்னைக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேசமயம், காசிமேடு மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவும் ஆந்திரா சென்றுள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications