இட்லி, பொங்கல், வடை, டீ, காபி விலை 15% குறைப்பு

ஹோட்டல்களில் இட்லி, பொங்கல், பூரி, டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை பெருமளவில் அதிகரித்திருந்தது. இதனால் ஹோட்டல்களுக்குச் செனறு சாப்பிட, குறிப்பாக குடும்பத்தோடு போய் சாப்பிட மக்கள் மிகவும் பயந்தனர்.
இதையடுத்து ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலைக் குறைப்பு தொடர்பாக ஹோட்டல் அதிபர்கள் சங்க நிர்வாகிகளுடன் இரு முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 10 சதவீத அளவுக்கு விலையைக் குறைப்பதாக ஹோட்டல் நிர்வாகிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். ஆனால் 20 சதவீதம் குறைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியது.
இந்த நிலையில் 15 சதவீதத்திற்கு விலைக் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக ஹோட்டல் அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு கடந்த 1ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் வசந்த பவன் ஹோட்டல் அதிபரும், சங்கத் தலைவருமான ரவி, செயலாளர் சீனிவாசன், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் இட்லி, தோசை, மதிய உணவு போன்றவற்றின் விலையைக் குறைக்க ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சம்மதம் தெரிவித்தது.
நடுத்தர உணவகங்களில் 2 இட்லி ரூ. 8, சாதா தோசை ரூ. 15, வடை ரூ. 8, பொங்கல் ரூ. 15, கிச்சடி ரூ. 15, ஒரு கப் டீ ரூ. 8 என்ற விலைக்கு மேல் விற்கப்பட்டு வரும் உணவகங்களில் தற்போதைய விலையில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை குறைக்கப்படும்.
சாதம் 250 கிராம், ரசம், மோர், கூட்டு, பொறியல், ஊறுகாயுடன் அளவு சாப்பாடு ரூ. 20க்கு வழங்கப்படும்.
முதல்வர் கருணாநிதயின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் விலை குறைக்கப்படும்.
இந்த விலைக்கு கீழ் ஏற்கனவே விற்பனை செய்து வரும் உணவகங்களில் தொடர்ந்து அதே குறைந்த விலையில் உணவுப் பண்டங்களை வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேற்கண்டவாறு விலைகளை குறைக்க அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
விலை குறைக்கப்படுதால், தரம், எடை, ருசி போன்ற எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்றும், வாடிக்கையாளர் பார்வைக்கு நன்றாக தெரியும்படி குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் வைக்கப்படும் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி இட்லி விலை ரூ. 6.50 முதல் 7 ஆகவும், சாதா தோசை விலை ரூ. 12.50 முதல் 13 என குறைக்கப்படலாம். வடையின் விலை ரூ. 7 வரைக்கும் இருக்கலாம். பொங்கல், கிச்சடி ஆகியவற்றின் விலை ரூ. 12.50 முதல் 13 வரை இருக்கும். டீ, காபி விலையும் ரூ. 6 முதல் 7 ஆக குறையலாம்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications