நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படிப்புக்கு அனுமதி
நெல்லை: நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படிப்பை தொடர இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
நெல்லை மருத்துவ கல்லூரியில் நோயாளிக்களுக்கான சிறப்பு வசதிகள், ஆய்வகங்கள், புதிய மருத்துவ கட்டிடங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது இந்திய மருத்துவ கவுன்சில் இம்மருத்துவக் கல்லூரியில், எம்.எஸ் (பொது அறுவை சிகிச்சை) பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எம்.எஸ் பட்டப்படிப்பானது நெல்லை மருத்துவ கல்லூரியில் கடந்த 1980ம் ஆண்டு முதலே தற்காலிக படிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பை முடிப்பவர்கள் தமிழகத்திற்கு வெளியே சென்று எம்.சி.ஹெச் உள்ளிட்ட மேற்படிப்புகளை படிக்க முடியாத நிலை காணப்பட்டது. தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளதால் மேல்படிப்பு படிக்க இயலும்.
தற்போது எம்.எஸ் பட்ட மேற்படிப்பில் 4 இடங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டு முதல் இது கூடுதலாக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
எம்.எஸ் படிப்புக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து சமூக சமத்துவ டாக்டர்கள் சங்க செயலாளர் துரை கூறுகையில், நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மருத்துவ துறையினரின் 28 ஆண்டுகால கனவு தற்போது நனவாகியுள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications