எம்.ஜி.ஆர். உறவினர் படுகொலை-ஜெ. கண்டனம்
சென்னை: எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன் என்கிற எம்.ஜி.ஆர். விஜயன் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், மனத் துயரம் அடைந்தேன்.
எம்.ஜி.ஆர். வாழ்ந்து மறைந்த இல்லத்தை சிறப்பான முறையில் பராமரித்து, எம்.ஜி.ஆரின் புகழைப் பரப்பும் வகையில், மன்னாதி மன்னன் என்கிற பத்திரிக்கையை நடத்தி வந்த விஜயன், அதிமுக பற்றாளராகவும், அதிமுக தலைமைக்கு விசுவாசமானவராகவும் திகழ்ந்தார்.
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது, சமூக விரோதிகள், சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்பதையே இது நினைவூட்டுகிறது.
விஜயனைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதற்கிடையே, விஜயனைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை போலீஸார் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications