நாளை கம்யூனிஸ்ட் பந்த்-பஸ், ரயில்கள் இயங்கும்: ஆட்டோக்கள் ஓடாது

இந்த போராட்டத்துக்கு சிஐடியுவுடன் இணைந்த ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பதால் தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஆட்டோக்கள் ஓடாது.
அதே போல சென்னை கோயம்பேடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோக்களும் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஊழியர் சங்கங்களும் பங்கேற்கவுள்ளனர். ஆனாலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகளின் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பந்த்தில் பங்கேற்கவில்லை.
இதனால் நாளை தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் வழக்கம் போல இயஙகும் எனத் தெகிறது. எந்த பஸ்சும் ரத்து செய்யப்படாது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என சென்னை போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ராம சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பஸ், ரயில் மறியல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆம்னி பஸ்களும் நாளை வழக்கம்போல் ஓடும். அதே போல தமிழ்நாட்டில் எல்லா ரரெயில்களும் வழக்கம் போல் ஓடும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதே போல கடைகளை மூட சொல்லி தகராறு செய்பவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் நாளைய பந்த்தால் இயல்பு வாழ்ககை பாதிக்கப்படாது என்றே தெரிகிறது.
ஜெ-விஜய்காந்துக்கு தா.பாண்டியன் சூடு:
இதற்கிடையே மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்துக் கொண்டே மறுபக்கம் இடதுசாரிகள் பந்த் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறுகையில்,
கேள்வி: மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்து கொண்டு மறுபக்கம் அரசை எதிர்த்து பந்த்' நடத்துவது சரியா?
பதில்: அதுதான் எங்கள் வழி. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். எங்கள் வழி தனி வழி.
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்கள் கட்சி நிலைப்பாட்டை கண்டித்துள்ளாரே?
பதில்: அவர் எங்களுக்கு வழி காட்டி அல்ல.
கேள்வி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் விமர்சித்துள்ளாரே?
பதில்: அவரிடம் பாடம் கற்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் அல்ல என்றார்.
லாரி, டேங்கர், டிப்பர், வேன் உரிமையாளர்கள் இன்று தங்கள் வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications