விஜயன் கொலை-மனைவியின் சகோதரி குடும்பம் மீது வழக்கு பதிவு

எம்ஜிஆருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ளன. இந்த சொத்துக்களை ஏழை, எளியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் யாரும் சுயலாபம் அடையக் கூடாது என்றும் அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.
இந்த சொத்துக்களை எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதில் அவர்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.
ஜானகியின் தம்பி நாராயணனின் மகள்களான சுதா (கணவர் விஜயன்), லதா (கணவர் ராஜேந்திரன்) ஆகியோர் இடையே போட்டி கடுமையாக இருந்து வந்தது.
இதையடுத்து இரு தரப்பும் ஒரு மீது ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தான் விஜயன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப விவரம்:
மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தம்பி நாராயணன். இவருக்கு 6 மகள்கள், ஒரு மகன். இதில் சுதாவை எம்ஜிஆர் தத்தெடுத்து வளர்த்தார். சுதாவின் கணவர் தான் விஜயன் என்ற விஜயகுமார் (வயது 55).
எம்ஜிஆர் அறக்கட்டளை நடத்தி வரும் இவர் தனது குடும்பத்துடன் ராமாவரம் தோட்டத்தில் வசித்து வந்தார்.
நாராயணனின் மற்றொரு மகள் லதா. இவரது கணவர் ராஜேந்திரன். இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். இவர்களும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளைக்குச் சொந்தமான நிறுவனங்களை நிர்வகித்து வந்தனர்.
சொத்துக்கள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந் நிலையில் விஜயன் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையையடுத்து அபிராமபுரம் போலீசில் விஜயனின் மனைவி சுதா கொடுத்த புகாரில் தனது குடும்பத்தினருக்கும் தனது சகோதரி லதாவின் குடும்பத்துக்கும் சொத்து பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சொத்து தொடர்பாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சுதாவின் சகோதரிகள் கீதா, லதா மற்றும் சகோதரர்கள் ராஜேந்திரன், குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சேகர் கூறுகையில்,
விஜயன் கொலை சம்பவத்தின் பின்னணியில் கடுமையான சொத்துத் தகராறு இருப்பது தெரிய வந்துள்ளது. நீண்டகாலம் இந்தத் தகராறு நீடித்து வருகிறது. கொலையில் பின்னணி குறித்து சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கூலிப் படையை வைத்து இந்தக் கொலை நடந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 7 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
சகோதரியின் கணவர்-மகன் மீது சுதா புகார்:
தனது கணவர் விஜயனின் கொலைக்கு தனது சகோதரி லதாவின் கணவர் ராஜேந்திரன், அவரது மகன் குமார் ஆகியோர் தான் காரணம் என சுதா குற்றம் சாட்டியுள்ளார்.
லதா-கணவர்-மகன் மீது வழக்குப் பதிவு:
இந் நிலையில் ராஜேந்திரன், அவரது மனைவி லதா, மகன் குமார் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120வது பிரிவின் (சதித் திட்டம் தீட்டுதல்) கீழ் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், போலீஸ் விசாரணையின்போது ராஜேந்திரன், லதா, குமார் ஆகியோர் இந்த கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துள்ளனர்.
கருணாநிதியுடன் லதா சந்திப்பு:
இந் நிலையில் கொலை செய்யப்பட்ட விஜயனின் மனைவி சுதா, முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து கொலைக்கான காரணம் குறித்து விளக்கி அழுதார்.
அவருக்கு ஆறுதல் கூறிய கருணாநிதி, குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது உதவியாளரை அனுப்பி சுதாவிடம் விவரம் கேட்டார். ஆனால், ராமாவரம் தோட்டத்துக்குப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications