விபச்சாரம்- துபாயில் 2 இந்தியர்கள் கைது
துபாய்: 3 பெண்களை அடைத்து வைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக இரு இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நம்ம ஊர் போலீஸ் பாணியில், மாறு வேடத்தில் ஒரு போலீஸ்காரர் அந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இந்தியத் தொழிலாளர் ஒருவரை அவர் அணுகி, உல்லாசமாக இருக்க பெண் தேவை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த இந்தியர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு போலீஸ்காரரை அழைத்துச் சென்றார்.
அந்த வீட்டில் 3 வங்கதேசப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மாறு வேடத்தில் சென்ற போலீஸ்காரர், அந்த பெண்களை விடுவித்தார். தன்னை அழைத்து வந்த இந்தியர் உள்ளிட்ட இரு இந்தியத் தொழிலாளர்களைக் கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட இரு இந்தியத் தொழிலாளர்களும் 20 வயதுகளில் உள்ளனர். வீட்டு வேலை செய்து வந்த 3 வங்கதேசப் பெண்களையும் கட்டாயப்படுத்தி இங்கு அடைத்து வைத்திருந்தனர். விபச்சாரத்தில் ஈடுபட மறுத்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இந்தியர்களும் துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தாங்கள் அப்பாவிகள் என இருவரும் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications